கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இன்று நாம் துதிப்பதைப் பற்றி சில காரியங்களைப்
பார்க்க போகிறோம்.
துதிப்பதற்கு சில
ஆலோசனைகள்
1.
கவனத்தை ஒருமுகப்படுத்தி நமது தேவனுக்கு நன்றி தெரிவிக்கும் செயல் மிகச் சிறந்தது
2.
நவமான மொழியில் பாடலாக துதிக்கலாம்
3.
பாடல்களை நமது கைப்பேசியில் வைத்து அதனுடன்
இனைந்து பாடலாம்
துதிக்கும் போது என்ன
நடக்கும்
1. துதி தொடர்ந்து செய்தால் தேவன் நம் வாழ்விற்கு வரைந்த வரைபடத்தின் வாழ்க்கையை (Blue Print) பூலோகத்தில் நம்மால் கட்டி எழுப்ப முடியும்.
1. துதி தொடர்ந்து செய்தால் தேவன் நம் வாழ்விற்கு வரைந்த வரைபடத்தின் வாழ்க்கையை (Blue Print) பூலோகத்தில் நம்மால் கட்டி எழுப்ப முடியும்.
2.
தேவனைத் துதிக்கும் வார்த்தைகள் விசுவாச இதயத்திலிருந்து புறப்பட்டு வாயின் மூலம் வெளிப்படும்பொழுது வல்லமை வெளிப்படும்.
3.
துதி என்பது ஆவிக்குரிய போராயுதம்
4.
விசுவாசத்தை பெருக்குகிறது.
5.
சாதிக்க முடியாதது இல்லாமல் போகும்.
6.
மகிமையின் பதில்களை பெற்றுக்கொள்கிறோம்
7.
எதிர்மறை சக்தி, நேர்மறையான வெற்றியின் சக்தியாக மாற்றப்படுகிறது.
8.
உயர்ந்த ஆசீர்வாதம் பெற உயர்ந்த திறவுகோல் துதி
9.
இனிய சமாதானம் வாழ்வில் நிலைத்திருக்க துதி
10.
சாத்தான் கொண்டு வரும் சந்தேகம் மறையும்.
11. துதி சாத்தானின் செயலை சின்னம் பின்னாமாக்கும். தொடர்ந்தேர்ச்சியான வல்லமையான துதி மூலம் அவன் செயலிழந்துவிடுகிறான்.
12.
கட்டுகளைத் தகர்க்கும்; தடைகளை விலக்கும்; பழுவைக் குறைக்கும், பாதையைச் செவ்வைப்படுத்தும்
எதற்க்காக
நாம் துதிக்க வேண்டும்
1. நன்மைகளை நினைக்கும்பொழுது தேவனுக்கு நன்றி கூறுங்கள். அவர் நமக்கு அன்பின் தகப்பனாக இருப்பதால், நாம் சுவிகாரப் புத்திரரானதால் நன்றியுள்ள இதயத்தோடு துதிக்கவேண்டும்.
2. தேவனை மகிமைப்படுத்த துதிக்கவேண்டும்.
3. வல்லமையுள்ள தேவனுக்கு நாம் ஊழியஞ்செய்ய இயலுவது குறித்து நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்
4.
தேவன் அவருடைய வார்த்தையைப் நமக்குத் தந்தருளினபடியினால் சங்கீதம் 119
5.
பெற்றுக்கொண்ட ஆசிர்வாதங்களுக்காக சங்கீதம் 78:42
6.
ஆயத்தம் பண்ணின காரியங்களுக்காக (ஆயத்தம்பண்ணின வாசஸ்தலம், புதிய வானம்,
புதிய பூமி)
7.
படைப்புக்காக வெளிப்படுத்தல் 4: 10
8.
மீட்பிற்காக வெளி 5:9
9.
தேவனுடைய பிரதான பன்புகளுக்காக (30 பெயர்கள்) துதிப்போம் எ.க: யேகோவா நிசி
10.
கர்த்தர் பெரியவர் ஆகையால் துதிக்க வேண்டும் சங்கீதம் 48:1
11.
அவர் செய்யும் அதிசயங்களுக்காக சங்கீதம் 107:21
12. வெண்கலக் கதவுகள் உடைய, இருப்புத் தாழ்ப்பாள்கள் முறிக்கப்பட நாம் துதிக்க வேண்டும்
ஆமென்.
No comments:
Post a Comment