இரக்கமுள்ள கர்த்தர் இரங்கும்படி காத்திருக்கிறார்
நம் கர்த்தர் இரக்கமுள்ளவர். ஆகவே உண்மையாகவே தனது இரக்கங்களை காண்பிக்க, ஆவலாய்
வாஞ்சையுடன் காத்திருக்கிறார். கட்டாயமாக மனதுருகும்படி எழுந்திருப்பார். எல்லா சூழ்நிலைகளின்
மத்தியிலும், கிருபையின் தேவன் காண்கிறார். அவருடைய இரக்கத்தை நமக்கு காண்ப்பித்து,
அவர் பிரசன்னத்தில் வந்திருக்கிற நம்மை இன்னும் சமாதானத்தினால் நிரப்புகின்றார்.
இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.
‘உன் கர்த்தரும், போதகருமானவர் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்; உன் கண்கள் அவரைக் காணும்.’ என்று சொல்லுகிறார்
‘நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் (This is the way, walk in it) என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்’ என்று திருவுளம்பற்றுகிறார்.
கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் இந்த நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும். (Isaiah 30:18-26)
துக்கத்திற்க்குப் பதிலாக சந்தோஷம் தருகிறார். இனி மன முறிவு இல்லை. தேற்றரவாளன்
ஆற்றி தேற்றி குணமாக்கி விட்டார்.
No comments:
Post a Comment