25 உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
26 உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.
49:22-26 நீண்ட மற்றும் சிறந்த ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபு மிகவும் விரும்பிய குமாரன் வருகிறார். ஆனால் யோசேப்பு யாக்கோபின் குமாரர்களிலெல்லாம் மிகவும் தகுதி வாய்ந்தவர் மற்றும் தேவன் யாக்கோபின் எண்ணங்களையும், வார்த்தைகளையும் வழிநடத்தினார். யோசேப்பின் இரண்டு குமாரர்கள் எப்பிராயீம், மனாசேயின் வழிவந்த கோத்திரத்தார் பின்னர் அவர்களின் பகுதியாக கானான் தேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளைப் பெற்றுக்கொண்டார்கள். எப்பிராயீம் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்கு இஸ்ரவேலின் முன்னணி கோத்திரமாகவும் பின்னர் வடக்குக் கோத்திர ராஜ்யத்தின் மையமாகவும் இருந்தது. இந்தக் கோத்திரத்தின் செழுமை ஓசியா 12:8 . இல் குறிப்பிடப்படுகிறது. யோசேப்பு சகோதரர்களிடத்திலும், எகிப்திலும்பட்ட கஷ்டங்களை வசனம் 23 குறிப்பிடுகிறது.
49:23
வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.
2 Corinthians 13:11
11 கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.
2 Corinthians 13:14
14 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
2 Timothy 4:22
22 கர்த்தராகியh இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.
No comments:
Post a Comment